இலங்கையில் செய்ய முடியாததை ஜெனிவாவில் சாதிக்க சிலர் முயற்சி; ஜனாதிபதி மஹிந்த குற்றச்சாட்டு

Written by vinni   // January 16, 2014   //

art.mahinda.rajapaksa.afp_.gi_இலங்கையில் செய்யமுடி யாததை ஜெனிவாவில் செய் வதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என குற்றம்சாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, ஹிட்லரின் கையாள் கொபெல்ஸ் போன்று எதிர்க் கட்சிகள் செயற்படுகின்றன என்றும் கடுமையாகச் சாடினார். அன்று பெண் தொழிலாளர்களின் கொழுந்துக்கூடையில் அமர்ந்து சென்ற வெள்ளையர்கள் இன்று பெண் உரிமைகளையும் மனித உரிமைகளையும் பற்றிப் பேசுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தேசிய தைப்பொங்கல் விழா நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அவர் தலைமையில் நடைபெற்றது. சுப வேளையில் இந்து சம்பிர தாயப்படி ஜனாதிபதியும் முதற் பெண்மணியான சிராந்தி ராஜபக்­வும் பொங்கல் வைத்தனர். அதன் பின்னர் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு: “தேசிய பொங்கல் விழாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இன, மத வேறுபாடு பாராமல் அனைத்து மக்களும் பங்குபற்றியுள்ளனர்.

இதனையிட்டு சந்தோ­ப்படுகிறோம். இது சிறந்ததோர் சமாதான இலட்சினையாகும். இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் சம அந்தஸ்தும், சம உரிமையும் இருக்கின்றன. அவற்றை நாம் பெற்றுக்கொடுப்போம். குறிப்பாக அண்மையில் நான் புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் கொழுந்துக்கூடை சுமந்து செல்லும் பெண்ணொருவரின் கூடையில் வெள்ளையர் அமர்ந்து செல்லும் காட்சியது. இதுபோன்றவர்கள்தான் இன்று பெண் உரிமை, மனித உரிமை பற்றிப் பேசுகிறார்கள். இந்தப் பகுதியில் ஆசிரியர் பற்றாக் குறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  அதன்பொருட்டு விரைவில் ஆசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும்.

வடக்குக்கு நாம் விசேட சேவைகளை வழங்கியதால் தான் தற்போது அந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகளில் முன்னிலையில் திகழ்கின்றனர். அத்துடன், இங்குள்ள பால் உற்பத்தியாளர்களுக்கும் நாம் எம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்துகொண்டே வருகிறோம். எதிர் காலத்தில் மேலும் உதவிகளைச் செய்யத் தயாராகவே உள்ளோம். அதேவேளை, இனவாதம் பேசி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் எதற்கெடுத்தாலும் என்மீது சேறு பூசு கின்றன. துறைமுகம் கட்டினாலும், விமானநிலையம், நெடுஞ்சாலைகள் அமைத்தாலும் என்மேல் குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள். இலவசமாக செய்யக்கூடிய ஒரே செயல் சேறுபூசுவது மட்டும்தான். ஹிட்லர் என்பவருக்கு கொபெல்ஸ் என்ற ஒரு கையாள் இருந்தார். பொய்த் தகவல்களைப் பலதடவை கூறினால் மக்கள் அதனை நம்பிவிடுவார்கள் என அவர் கூறியிருந்தார். எமது நாட்டில் எதிர்க்கட்சிகளும் அவ்வாறே செயற்படு கின்றன. ஆனால் எமது மக்கள் அவ்வாறான வதந்திகளை நம்பி ஏமாறவில்லை என்பதை தேர்தல் பெறு பேறுகள் எடுத்துக்காட்டுகின்றன. அத்தோடு சிலர் இந்த நாட்டில் செய்யமுடியாததை ஜெனிவாவில் செய்ய முயற்சிக்கின்றனர்” என்று கூறினார் ஜனாதிபதி.


Similar posts

Comments are closed.