அவுஸ்திரேலியாவில் சச்சின் அதிரடி மழை பொழிவாரா?

Written by vinni   // January 16, 2014   //

sachin_002அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டுவென்டி- 20 தொடரில் சச்சின் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர், மகத்தான சாதனையுடன் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் திகதியுடன் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டுவென்டி- 20 தொடரில் பங்கேற்பதற்காக சிட்னி தண்டர்ஸ் அணி சச்சினை அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு தொடர்களில் பங்கேற்ற 15 போட்டிகளில், இரண்டில் மட்டுமே சிட்னி தண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது, ஒருமுறை கூட முதல் சுற்றை தாண்டவில்லை.

இதனால் நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில், சச்சினை நான்கு வாரங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் செய்து தருமாறு மாநில அரசை அணுகியுள்ளனர், ஆனால் இதை சச்சின் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது குறித்து தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.

இந்த அணியில் அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இலங்கையின் தில்ஷன், மைக்கேல் ஹசி மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Similar posts

Comments are closed.