மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வி: தொடரை வென்றது நியூசிலாந்து

Written by vinni   // January 16, 2014   //

new_zealand_001நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி 20-இருபது கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி இருபது ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது.

அதிகபட்சமாக ராம்டின் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களும், பிளட்சர் 40 ஓட்டடங்களையும் எடுத்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் மிலின் 2 விக்கெட்டும், மெக்லகன், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

160 என்ற வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக லுக் ரோஞ்ச் 51 ஓட்டங்களும், ராஸ் டெய்லர் 39 ஓட்டங்களும் எடுத்தனர். மேற்கிந்திய அணி தரப்பில் ஹோல்டர், சுனில்நரின், ரஸ்செல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். நியூசிலாந்து வீரர் லுக் ரோஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது.

ஆக்லாந்தில் நடந்த முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 81 ஓட்டங்களை வித்தியாசத்தில் வென்று இருந்தது.


Similar posts

Comments are closed.