இலங்கைக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க பிரேஸில் இணக்கம்

Written by vinni   // January 16, 2014   //

 images (1)இலங்கைக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க பிரேஸில் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும், பிரேஸில் பாதுகாப்பு அமைச்சர் செல்சோ அமோரினுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பிரேஸிலுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை தலைநகர் பிரேஸிலியாவில் சந்தித்துள்ளார்.இராணுவப் பயிற்சி அளிப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட உள்ளது,இதேவேளை, இலங்கையினால் வழங்கப்பட உள்ள பாதுகாப்பு பயிற்சிகளில் பிரேஸில் படையினரும் பங்கேற்க உள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளுடனும் இலங்கை பாதுகாப்பு துறை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்


Similar posts

Comments are closed.