ரகசியமாக மூன்று ராக்கெட்டுகளை ஏவிய நாசா

Written by vinni   // January 16, 2014   //

nasa_001அமெரிக்க இராணுவத்தின் ரகசிய பயணங்களை உள்ளடக்கிய மூன்று ராக்கெட்டுகளை நாசா இன்று விண்ணில் ஏவியது.

டெர்ரியர்-ஆனியன் என்ற இந்த ராக்கெட்டுகளை 20 விநாடி வித்தியாசத்தில், அதிகாலை 4.09 மணிக்கு தொடர்ச்சியாக விண்ணில் செலுத்தி நாசா சாதனை படைத்துள்ளது.

நாசா அதிகாரிகளிடம் ராக்கெட் எப்போது ஏவப்பட்டது என்ற தகவலை வெளியிட வேண்டாம் என அமெரிக்க பாதுகாப்பு துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

இரு அடுக்கு சுழற்சி கொண்ட இந்த ராக்கெட்டுகள் 1315 கிலோ எடை கொண்டதாகவும், 91 கிலோ எடையுள்ள பொருளை 200 கி.மீ உயரத்திற்கு சுமக்கும் சக்தியும், 363 கிலோ எடையுள்ள வெடிபொருளை 80 கி.மீ உயரத்திற்கு சுமக்கும் சக்தியும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


Similar posts

Comments are closed.