பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை: தாய்லாந்து பிரதமர்

Written by vinni   // January 16, 2014   //

imagesபிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என தாய்லாந்து பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தாய்லாந்தில் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் தாய்லாந்து தலைநகரை முற்றுக்கையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், தாம் பதவி விலகப் போவதில்லை என ஷினவத்ரா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் இரண்டாம் திகதி தேர்தல் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Similar posts

Comments are closed.