வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் நாடு திரும்ப முறைப்பாடு!

Written by vinni   // January 15, 2014   //

download (1) (1)மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கல ரந்தெனிய கூறுகின்றார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வபர்களுக்கான ஒப்பந்த காலம் 2 வருடங்களாக இருப்பதுடன் இந்த காலப்பகுதியில் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நாடு திரும்ப முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது.

இது தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறுகின்றார்.

கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் இவர்களுள் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது தொடர்பில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் தெளிவூட்டப்பட்ட போதிலும் அங்கு சென்ற பின்னர் சிலர் மீண்டும் நாட்டிற்கு வர முயற்சிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.


Similar posts

Comments are closed.