கம்பியில்லா முறையில் மின் இணைப்பு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Written by vinni   // January 15, 2014   //

wireless_connectivity_001கம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில்,

“மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் கம்பி இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.

செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங் களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.


Similar posts

Comments are closed.