பறந்து சென்ற பறவையை ஒரே பாய்சலில் விழுங்கிய மீன்

Written by vinni   // January 15, 2014   //

fish_ate_bird_001.w245அபிரிகாவின் டைகர் ஃபிஷ் (Tigerfish) ரக மீனினம் இரை தேடி பறந்து சென்ற பறவை ஒன்றை விழுங்கிய காட்சி ஆய்வாளர்களின் கமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த வகை மீன்கள் பறவைகளை விழுங்கும் என ஏற்கனவே கண்டறியப்பட்ட போதிலும் பறந்து செல்லும் பறவையை பாய்ந்து விழுங்கும் என கண்டறியப்பட்டமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

டைகர் ஃபிஷ் வகை மீன்கள் அவற்றின் கூரிய பற்களுக்கு பிரசித்தி பெற்றவை.

இந்த காட்சி தென்னாபிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள வாவி ஒன்றில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வாளர்களால் இந்த அரிய காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Comments are closed.