ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா, லீ நா 3–வது சுற்றுக்கு தகுதி

Written by vinni   // January 15, 2014   //

download (4)கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இன்று காலை நடந்த 2–வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த வெஸ்னாவை எதிர் கொண்டார்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6–1, 6–2 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் 3–வது சுற்றில் கரோலினா (செக்குடியரசு) அல்லது டேனிலாவை (சுலோவாக்கியா) எதிர் கொள்கிறார்.

உலகின் 4–ம் நிலை வீராங்கனையான லீநா 6–0, 7–6, (7–5) என்ற நேர் செட் கணக்கில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சப்ரோவை வீழ்த்தி 3–வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 3–வது சுற்றில் 26–ம் நிலை வீராங்கனையான சபரோவாவை எதிர் கொள்கிறார். சபரோவா 6–7, (4–7), 6–3, 6–0 என்ற செட் கணக்கில் லுசியை (செக்குடியரசு) போராடி வென்றார்.

மற்ற ஆட்டங்களில் 22–ம் நிலை வீராங்கனை மகரோவா (ரஷியா), மோனிகா (ருமேனியா) ஆகியோர் வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

7–ம் நிலை வீரரான தாமஸ் பொடிச் (செக்குடியரசு) 2–வது சுற்றில் பிரான்சை சேர்ந்த கென்னியை எதிர் கொண்டார். இதில் பெர்டிச் 6–4, 6–1, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 3–வது சுற்றில் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 32–ம் நிலை வீரரான இவான் டோடிக் (குரோஷியா) காயத்தில் வெளியேறினார்.

போஸ்னியாவை சேர்ந்த தாமீர் 4–6, 4–6, 6–3, 4–1 என்ற கணக்கில் இருந்த போது டோடிக் வெளியேறினார். இதனால் தாமீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

14–ம் நிலை வீரரான மைக்கேல் யூஜனி (ரஷியா) 2–வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். ஜெர்மனியை சேர்ந்த புளோரியன் மேயர் 6–4, 3–6, 6–3, 3–6, 6–3, என்ற செட் கணக்கில் யூஜனியை போராடி வென்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Similar posts

Comments are closed.