மரணத்தை குறைக்கும் நட்ஸ் : ஆய்வின் மூலம் புதிய தகவல்கள்

Written by vinni   // January 15, 2014   //

images (1)ஒரு வாரத்தில் ஏழு முறை கொட்டைப் பருப்புகளை(நட்ஸ்) உணவில் சேர்த்துக் கொள்ளுவது எந்தவித நோய் காரணமாக இருந்தாலும் மரணத்தை 20 சதவிகிதம் குறைக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நியு இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வானது இதுபோன்ற கொட்டைப் பருப்புகளை உட்கொள்ளுவதற்கும், இதயநோய், புற்று நோய் மற்றும் சுவாச நோய்கள் காரணமாக ஏற்படும் மரண நிகழ்வுகள் குறைவதற்கும் இருக்கும் முக்கியத் தொடர்பை விவரிக்கின்றது.

இத்தகைய பருப்புகளில் இருக்கும் நீர்த்துப் போகாத கொழுப்பு அமிலங்கள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள்,தாதுப் பொருட்கள் மற்றும் ஆன்டியாக்சிடன்ட்டுகள் போன்றவை இந்தப் பாதுகாப்பு சத்தை உடலுக்கு அளிப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

நீண்ட கால ஆரோக்கியத்திற்கும், சுகாதார பலன்களுக்கும் தினமும் உண்ணும் பாதாம் போன்ற பருப்புகளுக்கும் இருக்கும் தொடர்பை இந்தப் புதிய ஆய்வும் வலு சேர்ப்பது போலவே அமைந்துள்ளது.

சிறிய திருப்திகரமான தொகுப்பில் பல நல்ல பண்புகளை இந்தப் பருப்புகள் அளிக்கின்றன என்று கலிபோர்னியாவின் பாதாம் வாரியத்தின் தலைமை விஞ்ஞான அதிகாரியான கரேன் லப்ஸ்லே தெரிவிக்கின்றார்.

புரதம் மற்றும் நர்ச்சத்தைக் கொண்ட பருப்பு வகைகளை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளும்போதே சாப்பிடுபவருக்குத் திருப்தி ஏற்படுவதால் உணவு இடைவேளைகளில் சத்தற்ற பண்டங்களை சாப்பிடும் வாய்ப்பு குறைகின்றது. இதனால் அவர்கள் தேகம் மெலிந்தும் காணப்படும் என்று உணவு ஆலோசனை மையத்தின் மருத்துவ ஊட்டச்சத்து ஆலோசகர் மற்றும் இயக்குனரான இஷி கோஸ்லா கூறுகின்றார்.

இந்தியாவில் இதய நோயால் ஆண்டுக்கு மூன்று மில்லியன் மரணங்கள் ஏற்படுகின்றன என்றும் இவை மொத்தக் கணக்கீட்டில் 25 சதவிகிதம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.