இலங்­கைப் போர்க்குற்­றங்கள் தொடர்­பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் : தமிழ் தே­சிய மக்கள் முன்­னணி கன­டாவின் சிரேஷ்ட அதி­கா­ரிகள் குழு­விடம் வலி­யு­றுத்­து

Written by vinni   // January 15, 2014   //

thesiyamunnaiஇலங்­கைப் போர்க்குற்­றங்கள் தொடர்­பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என கனடா வலி­யு­றுத்த வேண்டும். அத்­துடன் வடக்கு, கிழக்கில் சர்­வ­தே­சத்தின் கண்­கா­ணிப்­புடன் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழ் தே­சிய மக்கள் முன்­னணி கன­டாவின் தென்­னா­சி­யா­விற்­கான சிரேஷ்ட அதி­கா­ரிகள் குழு­விடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­திற்கு இரு நாள் விஜயம் மேற்­கொண்­டுள்ள கனடா நாட்டின் தென்­னா­சிய விவ­கா­ரங்­க­ளுக்­கான சிரேஷ்ட அதி­கா­ரி­யான ஜே மேகன் பொஸ்ரர், சரா ஜூலிஸ் அடங்­கிய குழு நேற்று தமிழ் தே­சிய மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் செ.கஜேந்­திரன், அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் மணி­வண்ணன் ஆகி­யோரைச் சந்­தித்து தற்­போ­தைய நிலை­மைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இச்­சந்­திப்புத் தொடர்­பாக தமிழ் தே­சிய மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் மேலும் தகவல் தரு­கையில்,

மக்­களால் தெரி­வு­ செய்­யப்­பட்ட வட­மா­காண சபை கடந்த நான்கு மாதங்­க­ளாக இயங்கி வரு­கின்­ற­ போதும் அதன் செயற்­பா­டுகள் ஆளு­நரின் அதி­கா­ரங்­களால் முன்­னோக்கிச் செல்ல முடி­யா­த­வாறு முடக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இம்­மா­காண சபையால் தனித்து நின்று ஒரு முடிவை எடுக்­க­ மு­டி­யாமல் உள்­ளது. இன்­னமும் வடக்கில் இரா­ணுவ அத்­து­மீறல் செயற்­பா­டுகள், கைதுகள், காணா­மற்­போதல் என்­பன நடை­பெற்­றுக் ­கொண்­டி­ருக்­கின்­றன.

இவற்றை மாகாண சபையால் தடுத்து நிறுத்­த­ மு­டி­யா­துள்­ளது. சபையில் உள்­ள­வர்­களால் மக்­களின் பிரச்­சி­னையை சர்­வ­­தே­சத்­திற்கு கொண்டு செல்­லவே முடி­கி­றது. ஆனால் அவற்றைத் தடுத்து நிறுத்த அதி­கா­ர­மற்ற சபை­யா­கவே உள்­ளது.

தமிழர் பிர­தே­சங்­களில் தொடரும் நில ஆக்­கி­ர­மிப்­புக்­களால் இடம்­பெ­யர்ந்த மக்கள் இன்­னமும் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­ப­டா­மலும் அவர்­களின் அடிப்­படைத் தேவைகள் பூர்த்தி செய்­யப்­ப­டாமல் இருப்­ப­தையும் இக்­கு­ழு­வி­ன­ரிடம் சுட்­டிக்­காட்­டினோம்.

அத்­துடன் சிறையில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள், புனர்­வாழ்வு முகாம்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் எனவும் புனர்­வாழ்வு பெற்று சமூக வாழ்­வோடு இணைக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளிகள் மீண்டும் தொடர் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் தவிர்ப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும்.

அத்­துடன் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­ காண்­ப­தற்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்பில் இடைக்­கால நிர்­வாகம் ஒன்றை அமைப்­ப­தற்கு சர்­வ­தே­சத்தை கனடா அர­சாங்கம் வலி­யு­றுத்த வேண்டும் என மேலும் தெரி­வித்தோம்.

எதிர்­வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் சர்வதேச விசாரணை, மீள்குடியேற்றம், பொதுமன்னிப்பு, இடைக்கால நிர்வாகம் என்பவற்றை நடைமுறைப்படுத்த சர்வதேசத்திற்கு கனடா வலியுறுத்த வேண்டும் எனவும் இக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்தோம் என்றார்.


Similar posts

Comments are closed.