மனைவி மற்றும் குடும்பத்தினரை கொன்றவரை கொன்றுன் தின்ற‌ ஆப்பிரிக்க வாலிபர்

Written by vinni   // January 15, 2014   //

Murder_titleமத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் சமீபத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. அதில், 1000–க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தலைநகர் பெங்குயியில் நடந்த கலவரத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி அவரது கொழுந்தியாள் மற்றும் குழந்தை கொல்லப்பட்டனர்.

இதனால் அந்த நபர் கடும் ஆத்திரத்துடன், வெறியுடன் இருந்தார். தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை கொன்றவரை பழிக்கு பழிவாங்க காத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவியை கொன்றவர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றதை அறிந்தார். உடனே, தனது ஆதரவாளர்கள் 20 இளைஞர்களை திரட்டி கும்பலாக சென்றார்.

பின்னர் அந்த பஸ்சை வழி மறித்து நிறுத்தினார். தனது மனைவியை கொடூர மாக கொன்ற அந்த நபரை பஸ்சில் இருந்து வெளியேற்றி னார்.

அவரை தெருவில் ‘தரதர’ வென இழுத்து வந்தார். பிறகு அவரை கத்தியால் குத்தி கொன்றார். அதை தொடர்ந்து அந்த நபரின் உடலை தீ வைத்து எரித்தார்.

இருந்தும் அவரது ஆத்திரம் தீரவில்லை. கொலை செய்யப்பட்ட நபரின் கால் மாமிசத்தை தின்று தனது பழிவாங்கும் வெறியை தணித்துக் கொண்டார்.

கொடூரமாக நடந்து கொண்ட அவர் தனக்கு தானே ‘‘பைத்தியக்கார நாய்’’ என பெயரிட்டு கொண்டார்.


Similar posts

Comments are closed.