தெற்கு சூடானில் கலவரம் : தப்பி ஓடிய 300 பேர் ஆற்றில் மூழ்கி பலி

Written by vinni   // January 15, 2014   //

isஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அதிபர் சல்வாகீருக்கும், முன்னாள் துணை அதிபர் ரியக்மாசருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. எனவே கடந்த டிசம்பர் முதல் ரியக்மாசர் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில முக்கிய நகரங்களை தன்வசப்படுத்தியுள்ளனர். அவற்றை மீட்க கலவரக்காரர்களுடன் ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் அங்கு உள் நாட்டு போர் மூண்டுள்ளது.

நடைபெறும் தாக்குதலில் இதுவரை 1000 பேர் பலியாகி உள்ளனர். எனவே, தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மக்கள் ஐ.நா. சபையின் முகாம்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு குடி பெயர்ந்துள்ளனர்.

நைல் நதி பிராந்தியத்தில் உள்ள மலாகல் பகுதி கலவரக்காரர்கள் வசம் உள்ளது. இது எண்ணை வளம் மிகுந்தது. எனவே, அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவம் போரிட்டு வருகிறது.

கலவரக்காரர்களும் ராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் உயிர் பிழைக்க பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடுகின்றனர்.

சுமார் 300 பேர் ஒரு படகில் ஏறி நைல் நதியின் அக்கரையில் உள்ள பகுதிக்கு புறப்பட்டு சென்றனர். ஆற்றின் நடுப்பகுதியில் சென்ற போது படகு தண்ணீரில் மூழ்கியது.

அதில் படகில் பயணம் செய்த 300 பேரும் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்டதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் மூழ்கியுள்ளது. படகில் ஆற்றைக் கடக்க தலா ரூ.4 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.


Similar posts

Comments are closed.