புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு பிரான்ஸிடம் கோரப்பட உள்ளது

Written by vinni   // January 15, 2014   //

lttetteதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம், பிரான்ஸிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இது குறித்த கோரிக்கையை முன்வைக்க உள்ளது. பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரையே இவ்வாறு நாடு கடத்துமாறு கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிரான்ஸில் வாழ்ந்து வருகின்றமை தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாம் தொழில் புரியும் இடத்தில் உரிய சலுகைகள் வழங்கப்படவில்லை என்பதனை முறைப்பாடு செய்ய காவல் நிலையத்திற்கு சென்றிருந்த போது குறித்த நபர் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

35 வயதான ஜெயந்தன் தர்மலிங்கம் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கைப் பயங்கரவாதம் தொடர்பில் சர்வதேச ரீதியில் தேடப்பட்டு வரும் பட்டியலில் குறித்த நபரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Similar posts

Comments are closed.