வடக்கு மாகாண அரச நிர்வாக அதிகாரிகளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ள முதலமைச்சர்

Written by vinni   // January 15, 2014   //

vikneswaranவடக்கு மாகாண சபை பதவியேற்று நான்கு மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடன், திணைக்களத் தலைவர்களையும் ஒரேநேரத்தில் முதலமைச்சர் முதல் தடவையாக நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்றது. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையைக் கைப்பற்றி ஒக்ரோபர் மாதம் ஆட்சி அமைத்திருந்தது.

ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாளை வியாழக்கிழமையே முதல் தடவையாக வடக்கு மாகாண அரச நிர்வாக அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

இழுபறி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபைக்கும், திணைக்களத் தலைவர்கள், செயலாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தொடர்ச்சியாக நீடித்து வருகின்றன.    வடக்கு மாகாண ஆளுநர், மாகாணசபை நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதா கத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது.

இந்த நிலையில் நாளை வியா ழக்கிழமை கல்லை 9.30 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அலுவலகம் திறப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகம் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. 26, சோமசுந்தரம் அவனியூவில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.


Similar posts

Comments are closed.