ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் : முடிவினை எட்ட ஐ.நா அணுசக்திக் குழு சந்திப்பு

Written by vinni   // January 15, 2014   //

franceஈரானின் அணுசக்தி ஆயுத உற்பத்தி முயற்சியை எதிர்த்த ஐ.நா உறுப்பினர் நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. கடந்த வருடம் அங்கு புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஹசன் ருஹானி அணுசக்தி உற்பத்தி ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறி ஈரானின் மீதுள்ள பொருளாதாரத் தடைகளை விலக்க முயற்சித்தார்.

இரு தரப்பினருக்குமிடையே நடந்த தொடர் சந்திப்புகளின் விளைவாக ஈரானின் கட்டுப்படுத்தப்பட்ட அணுசக்தி இயக்கங்களைத் தொடர்ந்து பரஸ்பர ஒப்பந்தம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆறு உலக நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒரு மைல்கல் ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது குறித்து ஐ.நாவின் அணு சக்திக் குழு வரும் 24 ஆம் தேதி கூடி விவாதிக்க இருப்பதாக நேற்று ஐ.நா தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தனது அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக ஒரு நிரந்தர ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வரையிலும் நிவாரண ஈடாக ஆறு மாத காலத்திற்கு ஆரம்பத் தடைகள் விலக்கப்படும் என்று உலக நாடுகள் தெரிவித்திருந்தன.

இதற்கான ஒப்புதலைப் பெறவுள்ள கூட்டமே வரும் 24 ஆம் தேதி ஐ.நாவின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் 35 உறுப்பு நாடுகள் கொண்ட குழுவால் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலான தங்களின் அணு கட்டுப்பாடு இயக்கங்களுக்குப் பதிலாக தடைகள் நீக்கப்படுவது என்பது தங்கள் நாட்டிற்கு சாதகமான ஒரு ஒப்பந்தம் என்று சித்தரிப்பதில் ஈரானிய அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகள் தங்களின் கோரிக்கைகளுக்குப் பணிந்துவிட்டன என்ற ஈரானிய அதிபர் ஹசன் ருஹானியின் அறிவிப்புமே இந்த ஒப்பந்தங்களைத் தடுத்த இஸ்லாமியத் தீவிரவாதிகளை சமாதானப்படுத்தும் நோக்கிலேயே அமைந்திருந்தது என்று குறிப்பிடப்படுகின்றது.


Similar posts

Comments are closed.