இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறை வங்காள தேசத்தில் தொடர்ந்தும் அதிகரிப்பு

Written by vinni   // January 15, 2014   //

bjpவங்காள தேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது குறித்து மத்திய அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

வங்காள தேசத்தில் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பிரதமராக ஷேக் ஹசீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்பு அந்நாட்டில் வசித்து வரும் இந்து மத மக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது ஜமாத் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதனுடன் ஆயிரக்கணக்கான இந்து மக்களின் கடைகள் தீ வைத்து கொளுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மத்திய அரசை பாரதீய ஜனதா கட்சி கேட்டு கொண்டுள்ளது.

அண்டை நாட்டில் நடைபெற்று வரும் நிலைமையை கண்காணித்து வருவதாக அரசு கூறி வருகிறது. ஆனால் ஜெஸ்சோர் போன்ற மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இந்து வீடுகள் மற்றும் கடைகள் மீது தீ வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான இந்து மக்கள் பாதுகாப்பு தேடி நிவாரண முகாம்களுக்கு சென்று விட்டனர்.  நாட்டில் வசிக்கும் இந்து மக்கள் மீதான தாக்குதலுடன் 12க்கும் அதிகமான கோவில்களை அந்த கும்பல் தாக்கி அழித்துள்ளதாக தகவல்


Similar posts

Comments are closed.