அமெரிக்க அதிகாரி ஸ்டீபன் ரெப் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு

Written by vinni   // January 14, 2014   //

BAR-Association1யுத்த குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் விசேட தூதுவர் ஸ்டிபன் ஜே ரெப், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் ரெப், சர்வதேசத்திற்கு இரட்டை வேடம் போடுவதாக இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் ஒன்றியம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இவ்வாறான காட்டிச் கொடுப்புக்கு எதிராக செயற்பட வேண்டும் என்றும் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவீந்து மனோஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டிபன் ஜே ரெப் போன்றோர் இங்கு வந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து, அன்று விடுதலை புலிகளால் குண்டுகளால் பெற்றுக்கொள்ள முடியாதனை இன்று பேனையினால் பெற்றுக்கொள்ள முனைகின்றனர். இதற்கு ஒரு போதும் இடம்கொடுக்க கூடாது என குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.