ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் 23ஆவது விடயமாக இலங்கை!

Written by vinni   // January 14, 2014   //

imagesஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை  23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.   மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.