சிரியாவின் பிடிபட்ட 60 பேரை ஈராக் ஜிஹாதிகள் சுட்டுக்கொன்றனர்

Written by vinni   // January 14, 2014   //

images2ஈராக்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜிஹாதி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் மேற்கத்திய நாடுகளின் படைகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய சட்டத்தை நாட்டில் கொண்டுவரவேண்டும் என்று கூறி போராடி வருகின்றனர். அல்கொய்தாவின் ஆதரவுடன் இயங்கும் இந்த சன்னி இஸ்லாம் கிளர்ச்சியாளர்கள் பக்கத்து நாடான சிரியாவின் அலெப்போ மாகாணத்திலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இம்மாகாணத்தில் உள்ள சிரியா போராளிகளுடன் 10 நாட்களுக்கு மேலாகஅவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அலெப்போ மாகாணத்தின் அல்-பாப் நகரை ஜிஹாதிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அல்கொய்தாவிற்கு எதிரான இஸ்லாமிய மிதவாத போராளிகள் மற்றும் பொதுமக்களையும் அவர்கள் சிறைபிடித்தனர். அவ்வாறு பிடிபட்ட 60 பேரை பின்னர் ஜிஹாதிகள் சுட்டு மரணதண்டனை கொடுத்தனர். பிறகு அங்கிருந்த மசூதி ஒலிபெருக்கியின் மூலம் மக்களை அழைத்து தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க செய்தனர். அப்போது அங்கு இஸ்லாமியா ஷரியா சட்டத்தையும் அவர்கள் நடைமுறைபடுத்தினர்.

கடந்த ஒருவருடமாக இப்பகுதியின் கட்டுப்பாட்டை இழந்த சிரியா ராணுவத்தினர், தற்போது விமானப்படை மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 50 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.