வெனிசுவேலா தூதரகம் பராகுவேயில் மீண்டும் திறக்கப்பட்டது!

Written by vinni   // January 14, 2014   //

e84312ef-7f56-44bc-b638-99a9ca18acdd_S_secvpfதென் அமெரிக்க நாடான பராகுவேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்நாட்டின் அதிபர் பெர்னாண்டோ லுகோ பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

இவர் வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேசின் நெருங்கிய நண்பர் ஆவார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து வெனிசுவேலா பராகுவேயில் இருந்த தனது தூதரகத்தை மூடியது.

18 மாதங்கள் கடந்த நிலையில் நேற்று மீண்டும் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது. வெனிசுவேலாவின் தூதரான அப்ரடோ முர்கா பாராகுவே நாட்டின் விவசாய விளைபொருட்கள் தங்கள் நாட்டிற்கு முக்கியமான தேவையாகும் என்றார்.

அதேபோல் வெனிசுவேலா உலகின் மிகப் பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது. பாரகுவேயில் எண்ணெய் உற்பத்தி இல்லை. எனவே அந்தப் பிராந்தியத்தின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான வெனிசுவேலாவுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ளுவதன்மூலம் அவர்கள் நன்மை பெறலாம்.

இரண்டு தென் அமெரிக்க நாடுகளும் தங்களின் பொருளாதார உதவிகளை ஒன்றுக்கொன்று தொடரலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.