தேசிய ஜூனியர் கைப்பந்து : தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Written by vinni   // January 14, 2014   //

India-Volleyball40-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, உத்தரகாண்ட்டை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய உத்தரகாண்ட் அணியை தமிழக அணி நேர்செட்டில் வீழ்த்தியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-16, 25-17, 25-12 என்ற நேர்செட்டில் உத்தரகாண்ட்டை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தமிழக அணியில் ஹரிகரன், வெங்கடேஷ், செல்வபாண்டி ஆகியோர் ஆட்டம் சிறப்பாக இருந்தது. மற்றொரு அரை இறுதியில் சாய் அணி 25-23, 25-19, 25-23 என்ற நேர்செட்டில் ராஜஸ்தானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-சாய் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்கள் பிரிவில் அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 21-25, 18-25, 14-25 என்ற நேர்செட்டில் அரியானா அணியிடம் தோல்வி கண்டது. மற்றொரு அரை இறுதியில் கேரள அணி 25-21, 25-23, 25-16 என்ற நேர்செட்டில் மராட்டியத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் அரியானா-கேரளா அணிகள் மோதுகின்றன.

வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி, மராட்டியத்தை சந்திக்கிறது.


Similar posts

Comments are closed.