இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் சவூதி அரேபியாவுடன் அரசாங்கம் ஒப்பந்தம்

Written by vinni   // January 14, 2014   //

Flag-Pins-Sri-Lanka-Saudi-Arabiaஇலங்கைப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் சவூதி அரேபியாவுடன் அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியாவிற்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப் பெண்கள்  உள்ளிட்ட பலதுறையைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் நன்மை அடைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைப் பணியாளர்கள் எதிர்வரும் காலங்களில் எஜமானரிடம் தங்களது கடவுச் சீட்டுக்களை ஒப்படைக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பளப் பணத்தை, ரொக்கமாக கையில் வழங்காது பணியாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எஜமானருக்கும் பணியாளர்களுக்கும் நன்மை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவிற்கும், சவூதி அரேபியாவின் தொழில் அமைச்சர் அடெல் பகீயாவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளை உள்ளடக்கிய தொழில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.