புனே-சத்தாரா தேசிய நெடுஞ்சாலையில் விபத்து : ஒன்பது பேர் பலி

Written by vinni   // January 14, 2014   //

accident_56மகாராஷ்டிர மாநிலம் புனே-சத்தாரா தேசிய நெடுஞ்சாலையில் கண்டாலா என்னுமிடத்தில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னே வந்த ஒரு ஜீப் அந்த லாரியில் சிக்கிக்கொண்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது விபத்தில் பலியான 9 பேரின் சடலங்களை வெளியே எடுத்தனர். மற்ற படுகாயமடைந்த 3 பேருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்கள் யார் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.