வங்கப்பிரதமர் ஷேக் ஹசீனாவின் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் : அமெரிக்கா அறிவிப்பு

Written by vinni   // January 14, 2014   //

bangladesh-415x260வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனாவும் (66) எதிர்க்கட்சித்தலைவரான வங்காளதேச தேசியவாத கட்சித்தலைவர் கலிதா ஜியாவும் (68) எலியும் பூனையும் போல் இருந்து வருகிறார்கள். ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கலிதா ஜியா நடத்தி வரும் போராட்டத்தில் அங்கு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கடந்த 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. இதை எதிர்கட்சிகள் புறக்கணித்தன. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பெற்றன. தேர்தலின்போது நடந்த வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகள் எரிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த ஞாயிறன்று ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 48 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நடந்த தேர்தலில் நம்பகத்தனமை குறித்து சில சந்தேகங்களை தெரிவித்த அமெரிக்கா, தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஷேக் ஹசீனா அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளது.


Similar posts

Comments are closed.