மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை – பிரதீபா மஹானாமாஹேவா

Written by vinni   // January 14, 2014   //

downloadமனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹானாமாஹேவா தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றின் ஊடாக அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன்புரியை கண்காணிக்கும் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது.

தேசிய ரீதியில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கக் கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரங்களை வலுப்படுத்துவது குறித்த 12 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் நீதிஅமைச்சிற்கு இந்த பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.