யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்யுமாறு கோரி போர்க்கொடி தூக்குவது நாகரிகமற்ற செயல்!

Written by vinni   // January 13, 2014   //

Mannar-Bishop-e1355020473664மன்னார் மற்றும் யாழ். ஆயர்கள் தாம் கேட்­ட­றிந்த உண்­மை­க­ளையே அமெ­ரிக்கத் தூத­ரிடம் சொன்­னார்­களே தவிர பொய்­களை அவர்கள் உரைக்­க­வில்லை. அவர்­களை தேசத்­து­ரோ­கிகள், கைது செய்ய வேண்­டு­மென்று போர்க்­கொடி தூக்­கு­வது அர­சியல் நாக­ரி­க­மற்ற செய­லாகும் என்று கிழக்கு மாகாண ஆயர்­களும், சிலாபம் மறை மாவட்ட ஆய­ர் வலன்ஸ் மென்டிஸ் ஆகியோர் தெரி­வித்­தனர்.

மன்னார் மற்றும் யாழ். ஆயர்கள் இரு­வரும் தேசத்­து­ரோக செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள். அவர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரும் அமைச்சர் விமல் வீர­வன்ச மற்றும் ஒரு சில இன­வாத அமைப்­பி­னரும் கூறிய கருத்­துக்கு மறு­த­லிப்­பாக திரு­கோ­ண­மலை மறை மாவட்ட ஆயர் கலா­நிதி கிங்­ஸிலி சுவாம்­பிள்ளை, மட்­டக்­க­ளப்பு மாவட்ட ஆயர் யோசப்­பொன்­னையா மற்றும் ஆயர்­மன்ற செய­லா­ளரும் சிலாபம் மறை மாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆகியோர் கூட்­டாக தெரி­வித்த கருத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார்கள்.

அம்­மூ­வரும் கருத்துத் தெரி­விக்­கையில்,

அறிந்­த­வற்றை தெரி­விப்­ப­தற்கு ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உரி­மை­யுண்டு அந்த வகையில் தாம் அறிந்த, அனு­ப­வித்த, கேட்­ட­றிந்த விட­யங்­க­ளையே மன்னார் ஆயரும் யாழ் ஆயரும் கூறி­யுள்­ளனர். அவர்­க­ளுக்கு தனிப்­பட்ட முறையில் அந்த உரிமை இருக்­கின்­றது என்­பது யாரும் மறுப்­ப­தற்­கில்லை.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப், யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆகியோர் யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­தி­ருந்த அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப்­பிடம், இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது இர­சா­யன ஆயு­தங்கள் மற்றும் கொத்துக் குண்­டு­களை பயன்­ப­டுத்­தி­னார்கள் என்று பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளையும் தக­வல்­க­ளையும் வழங்­கி­யதன் கார­ண­மாக அவர்­களை கைது செய்ய வேண்டும். இவர்கள் தேசத்­து­ரோக செயலில் ஈடு­பட்­டுள்­ளனர் என்று குற்றம் சாட்­டு­வது நாக­ரி­கத்­தன்­மை­யான செய­லாக இருக்க முடி­யாது. மேற்­படி ஆயர்கள் இரு­வரும் தாம் மக்­க­ளி­ட­மி­ருந்து கேட்­ட­றிந்த உண்­மை­க­ளையும் கண்­ட­றிந்த செய்­தி­க­ளை­யுமே எடுத்துக் கூறி­யுள்­ளனர்.

இவற்றில் உண்மைத் தன்மை உண்டா? இல்­லையா? என்­பதைக் கண்­ட­றிய வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்­தி­ட­மே­யுண்டு. இறுதி யுத்­தத்தில் என்ன அனர்த்­தங்கள் நடந்­தன?

எவ்­வகைப் பாதிப்­புக்­களை மக்கள் அடைந்­தார்கள் என்ற விவ­ரத்தை மக்­களின் வாயி­லா­கவும் பட்­ட­றிந்­த­வர்­க­ளி­னூ­டா­க­வுமே அவர்கள் அறிந்­தி­ருக்க வேண்டும். அந்த உண்­மை­க­ளையே அவர்கள் கூறி­யி­ருக்­கலாம். அவ்­வாறு இருக்­கின்­ற­போது மதத்­த­லை­வர்­களை தேசத்­து­ரோ­கிகள் என்றும் கைது செய்ய வேண்­டு­மென்றும் இனத்­து­வே­ஷத்­துடன் கூறு­வது நாட்டின் நல்­லி­ணக்­கத்­துக்கும் சமா­தா­னத்­துக்கும் மருந்­தா­கி­விட முடி­யாது.

பொது­வாக இறுதி யுத்தம் நடந்த பிர­தே­சங்கள் என்று சொல்­லப்­படும் முள்­ளி­வாய்க்கால், கிளி­நொச்சி, மன்னார் போன்ற பிர­தே­சங்கள் பாதிக்­கப்­பட்­டதை நாமும் அறிந்­தி­ருக்­க­வில்லை. இருந்த போதிலும் அன்­றைய காலப்­ப­கு­தியில் வெளி­வந்த செய்­தி­க­ளி­னூ­டா­கவும் பத்­தி­ரி­கை­களின் வாயி­லா­கவும் அறிந்­தி­ருக்­கின்றோம்.

இந்த நாட்டின் மீது பற்றும் நம்­பிக்­கை­யு­முள்­ள­வர்கள் நல்­லி­ணக்­கத்­தையும் சமா­தா­னத்­தையும் கொண்டு வர வேண்­டு­மென்று நினைக்­கின்ற ஆயர்­களை இவ்­வாறு பண்­பற்ற தன்­மையில் உண்­மைக்குப் புறம்­பாக குற்றம் சாட்டி அவ­ம­திப்­பது நாட்­டையே அவ­ம­திக்கும் செய­லாகும்.

கத்­தோ­லிக்­கர்கள் சிறு­பான்­மை­யாக இருந்­தாலும் இந்த நாட்டில் வாழும் ஒரு சிறு­பான்மை சமூகம். அவர்­க­ளுக்கு கருத்­துக்­கூற முடி­யாது என்று யாரும் சொல்­லி­விட முடி­யாது. இத்­த­கைய மத­வாத. இன­வாத விஷங்­களை கக்­கு­வது நாட்­டுக்கும் ஏனைய சமூ­கத்­துக்கும் நல்­லது அல்ல. அதிலும் சர்­வ­தேச ரீதி­யாக நெருக்­கடி நிலை­யொன்­றிற்கு முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்கும் இந்த சந்­தர்ப்­பத்தில் மத­வா­தங்­களை கிளப்பி விடு­வது உகந்­த­தாக இருக்க முடி­யாது.

கொத்துக் குண்­டு­களைப் பாவித்­துள்­ளார்கள். இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்ற விடயம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் எடுத்துக் கூறப்­பட்ட விட­ய­மாகும். இது­பற்றி பல சந்­தர்ப்­பங்­களில் கூட்­ட­மைப்­பினர் பகி­ரங்­க­மா­கவே கூறி­யுள்­ளனர்.

சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று வேண்­டுமா. இல்­லையா என்­பதை தீர்­மா­னிக்க வேண்­டிய பொறுப்பு ஐக்­கிய நாடுகள் சபையை சார்ந்த விட­ய­மாகும் அதை நாம் யாரும் தீர்­மா­னிக்க முடி­யாது. இருந்த போதிலும் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று கொண்டு வரப்­பட வேண்­டு­மென முடிவு மேற்­கொள்­ளப்­ப­டு­மானால் அதை யாரும் தடுத்து விட முடி­யாது.

உண்­மையை அறிய வேண்­டிய கடமை ஒரு­புறம் அர­சாங்­கத்­துக்கும் மறுபுறம் சர்வதேசத்துக்கும் உண்டு என்பதே யதார்த்தம். விசாரணைக்குரிய நேரமும் காலமும் வருமாக இருந்தால் அது தவிர்க்க முடியாத விடயமேயாகும்.

இது பற்றி விசேட கருத்தைத் தெரி­வித்த சிலாபம் மறை மாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் உண்­மையை கண்­ட­றிய வேண்­டிய பொறுப்பு அர­சாங்­கத்தை சார்ந்­தது. அதே­வேளை. கண்­ட­றிந்த உண்­மை­களை தெரி­விப்­ப­தற்கு தனிப்­பட்ட முறையில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உரி­மை­யுண்டு. அந்த வகை­யி­லேயே மன்னார் யாழ். ஆயர்­மாரின் கருத்து அமைந்­தி­ருக்­க­லா­மெனத் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.