சிறிலங்காவில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி

Written by vinni   // January 13, 2014   //

download (1)அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு முக்கிய அதிகாரி சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இராஜாங்கத் திணைக்கத்தில், பூகோள குற்றவியல் பணியகத்தில் போரக்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தமது ஆறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் வொசிங்டன் திரும்பியுள்ளார்.

அதேவேளை,இராஜாங்கத் திணைக்களத்தில், ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணியகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரே சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிறிலங்கா வந்துள்ள அந்த அதிகாரி யார் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை மற்றும், கண்காணிப்பு பணியகம், ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமன்றி அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.


Similar posts

Comments are closed.