உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடம்

Written by vinni   // January 13, 2014   //

bill_gates_002உலக மக்களை அதிகம் கவர்ந்த பிரபலங்கள் குறித்து, ‘யுகோவ்’ என்ற தனியார் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் முதல் 30 இடங்களை பிடித்துள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில், உலக கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 2-வது இடமும், ரஷ்ய அதிபர் புதின் 3-வது இடமும், போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4-வது இடமும் பெற்றுள்ளனர்.

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

நரேந்திர மோடி (7-ம் இடம்), அமிதாப் பச்சன் (9-ம் இடம்), அப்துல் கலாம் (10-ம் இடம்), அன்னா ஹசாரே (14-ம் இடம்), அரவிந்த் கெஜ்ரிவால் (18-ம் இடம்) ரத்தன் டாடா (30-ம் இடம்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள பிற இந்திய பிரபலங்கள் ஆவர்.

இந்த பட்டியலில் ராணி எலிசபெத் (17-ம் இடம்), ஏஞ்சலினா ஜூலி (19-ம் இடம்), ஓப்ரா வின்பிரே (20-ம் இடம்), ஏஞ்சலா மெக்கல் (26-ம் இடம்), ஹிலாரி கிளிண்டன் (27-ம் இடம்) பெங்லியுவன் (28-ம் இடம்) ஆகிய 6 பெண்கள் மட்டுமே இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல் 15 இடங்களுக்குள் இங்கிலாந்தை சேர்ந்த யாரும் வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.


Similar posts

Comments are closed.