வெள்ளை வானில் கடத்தப்பட்ட இளம்பெண் ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் விடுவிப்பு

Written by vinni   // January 13, 2014   //

vanபினான்ஸ் நிறுவனமொன்றில் கடமையாற்றிய இளம் பெண்ணொருவர் வெள்ளை வானொன்றில் கடத்தப்பட்டு சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குப் பின் சன நடமாட்டமில்லாத இடமொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று பண்டாரவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட பெண் வெலிமடைப் பகுதியில் பினான்ஸ் நிறுவனமொன்றில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருபவராவார்.

இப்பெண் வெள்ளை வானொன்றில் கடத்தப்பட்டு மயக்கமுறச் செய்யப்பட்டார். அதன் பின் அப் பெண் மயக்க நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளார்.

அவ்வழியாக வந்த சிலர் பாதை ஓரத்தில் கிடந்த பெண்ணை பண்டாரவளை அரசினர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் பின்னர் அப் பெண் சுகம் பெற்று தமது கணவருக்கு அறிவித்துள்ளார்.

கணவர் வந்ததும் இருவருமாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துவிட்டு வீடு திரும்பினர்.

தம்மைக் கடத்தியவர்கள் யார் என்பது பற்றி தமக்கு தெரியாதென்றும் ஆனால், தாம் மூன்று பேரினால் வெள்ளை வானொன்றில் கடத்தப்பட்டேன் என்பது தனக்கு நினைவிருப்பதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.