60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்த 80 வயது முதியவர்….

Written by vinni   // January 11, 2014   //

not_bathing_001.w245ஈரான் நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். தினந்தோறும் குளிக்காவிட்டால் எதையோ பறிகொடுத்தது போன்று அனைவரும் உணர்வார்கள்.

உலகமே இவ்வாறு சுழன்று கொண்டிருக்க, ஈரானை சேர்ந்த 80 வயது முதியவர் அமோவ் ஹாஜி, கடந்த 60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இளவயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை அடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.

இவரை மடக்க பிடித்து குளிக்க வைக்க ஊர்க்காரர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போனது.

செயின் ஸ்மோக்கர் ஆன இவர் விரும்பி சாப்பிடுவது, கெட்டுப்போன இறைச்சியையும், செத்துக் கிடக்கும் உயிரினங்களின் மாமிசத்தையும் தான்.

இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் வரை 66 வயதான ஒரு நபர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் பெரிய சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது அமோவ் ஹாஜி முறியடித்து விட்டார்.

முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர், இந்தியாவின் வாரணாசி பகுதியை சேர்ந்த கைலாஷ் சிங் என்பவர்தான்.

‘உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை’ என 1974-ம் ஆண்டில் சபதமேற்றுக் கொண்ட இவர் 2012 வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது.


Comments are closed.