இரவு விடுதியில் தகராறு! பிரபல வீரருக்கு சிறைத்தண்டனை

Written by vinni   // January 11, 2014   //

eddie_irvine_002இத்தாலியில் உள்ள இரவு நேர விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக, முன்னாள் பார்முலா 1 பந்தய வீரர் எடீ இர்வினுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விடுதியில் விஜபி பிரிவு பகுதியில் கேப்ரியல் மோரடியுடன், அயர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் பார்முலா 1 பந்தய வீரர் எடீ இர்வீன் தகராறில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து இத்தாலி நீதிமன்றம் இர்வினுக்கு 6 மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதனால், இருவரும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள் என்று மோரடியின் வழக்குரைஞர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இர்வின், ஜோர்டான் நாட்டுக்காக எஃப்1 போட்டிகளில் ஃபெராரி மற்றும் ஜாகுவார் அணிகளுக்காக 9 ஆண்டுகள் பங்கேற்றுள்ளார்.


Similar posts

Comments are closed.