அமெரிக்காவின் கருத்துகளுக்கு சிறிலங்கா கடும் எதிர்ப்பு – ஸ்டீபன் ராப்பிடம் நேரடியாகத் தெரிவித்தார் பீரிஸ்

Written by vinni   // January 11, 2014   //

imagesஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவும் கடுமையான எதிர்ப்பை நேரில் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஜே ராப் வடக்கில் மேற்கொண்ட பயணத்தின் போது வெளியிட்ட கருத்துகள் மற்றும், இரணைப்பாலை. சென்.அந்தனீஸ் மைதானத்தை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதல் என்ற டுவிட்டரில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்து உள்ளிட்டவற்றுக்கே சிறிலங்கா தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடனும், வெளிவிவகாரச் செயலருடனும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தார் ஸ்டீபன் ஜே ராப்.

இதன்போதே, அவர் மற்றும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட கருத்துகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

முன்னதாக, முன்னதாக, படையினரின் பீரங்கித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று டுவிட்டரில் வெளியிடப்பட்ட கருத்துக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஸ்டீபன் ஜே ராப்பை சந்திக்கும் போது நேரடியாக கடும் எதிர்ப்பை வெளியிடுவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் ஏஎவ்பியிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,


Similar posts

Comments are closed.