Ubuntu இயங்குதளத்தினைக் கொண்ட புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Written by vinni   // January 11, 2014   //

meizu_mx3_001Ubuntu நிறுவனம் தனது இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை இந்த வருடத்தில் வெளியிடப்போவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதன் முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Meizu MX3 எனப்படும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வருடம் சீனாவில் வெளியிடப்பட்டிருந்தது. இக்கைப்பேசியே தற்போது Ubuntu இயங்குதளத்தினை அடிப்டையாகக் கொண்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

5.1 அங்குல அளவு, 1800 x 1080 Pixel Reslution உடைய இக்கைப்பேசியானது Samsung Exynos 5 Octa Processor, 2GB RAM, 16GB அல்லது 128GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.


Similar posts

Comments are closed.