ரூ.17 லட்சத்தை கொளுத்திய சகோதரிகள்

Written by vinni   // January 11, 2014   //

moneyபாகிஸ்தான் நாட்டில் ரூ.17 லட்சத்தை சகோதரிகள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பிலால் நகரைச் சேர்ந்தவர்கள் நஹீத்(40), ரூபினா(35). சகோதரிகளான இவர்கள் 3 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தேசிய வங்கிக்கு சென்று ரூ.17 லட்சத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்துள்ளனர், இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது.

மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமானாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது, வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளார்.

இந்த தகவலானது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், இந்த சகோதரிகளின் தந்தை பெயர் ராஜா முகம்மது இக்பால். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இவரது சொத்தை விற்றுத்தான் ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 28 லட்சம் பணத்தைப் சகோதரிகள் பெற்றனர் . வங்கியில் போட்ட அந்த பணத்தில் இருந்துதான் ரூ. 17 லட்சத்தை எடுத்து தீவைத்து எரித்துள்ளனர்.

இரு சகோதரிகளும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்களுக்கு இரு தம்பிகளும் உள்ளனர், ஆனால் அவர்களுடன் இவர்கள் சேர்ந்து வசிக்கவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் மேலும் இவர்கள் இருவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று இவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர்கள் கூறியுள்ளனர்.


Similar posts

Comments are closed.