வியக்கதக்க பயணம் மேற்கொண்ட அதிசய பறவை

Written by vinni   // January 11, 2014   //

bird_trip_003பிரிட்டனில் சிறிய வகை பறவை ஒன்று 16,000 மைல்கள் பயணித்து சாதனை படைத்துள்ளது.
பாலரோப் என்ற சிறிய வகை பறவையே இச்சாகசத்தை நிகழ்த்தியுள்ளது.

இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், மொத்தம் 16,000 மைல் தூரம் பயணித்து பாலரோப் பறவயின் சாகசம் வியக்கதக்கதாய் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் ஷேடர்லாந்த் என்ற பகுதியிலிருந்து தன் பயணத்தை தொடங்கிய பாலரோப் பறவை அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதி, கரிபியன் மற்றும் மெக்ஸிகோ பகுதிகளிலும் பயணித்தது.

இறுதியில் தென் அமெரிக்காவின் பெரூ நாட்டில் தன் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியது.

இதற்கிடையே இந்த பறவை அரேபிய கடல் பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கும் என்று சில விஞ்ஞானிகள் எண்ணினர்.

ஆனால் இப்பறவை பயணித்த இடங்களின் விளக்கப்படம் ஒன்று சுவிஸ் RSPB பறவை நிபுணர்கள் மற்றும் ஷேட்லாந்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியிடப்பட்டது.

இதில் அப்பறவை பயணித்த இடங்கள் மிக தெளிவான முறையில் ஓவிய வடிவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுவிஸ் RSPB பறவை நிபுணரான மால்சி ஸ்மித் கூறுகையில், இந்த பால்ரோப் பறவை பிரிட்டனில் வாழும் ஸ்டார்லிங் என்ற பறவையை காட்டிலும் சிறியது.

எனினும் இப்பறவை கடினமான பயணத்தை மிகவும் அசாதரணமாக மேற்கொண்டு பத்திரமாக நாடு திரும்பி ஈடில்லா சாதனையை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.