திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலைகள் தொடர்பிலும் ஸ்டீபன் ராப் கேள்வி!

Written by vinni   // January 11, 2014   //

imagesதிருகோணமலையில் 2006ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் மற்றும் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்னவென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்ற விவகார தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப் இலங்கை சட்டமா அதிபரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள இலங்கையின் சட்டமா அதிபரான பாலித பொணான்டோ, ஐந்து மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் கொலைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலைமை தொடர்பில் ஸ்டீபன் ஜே.ராப் கேள்வியெழுப்பிய போது, அவ்வாறானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.