முக்காடு அணிந்த பெண்ணுக்கு அபராதம்

Written by vinni   // January 10, 2014   //

green eyes red green eyes muslim hijab arab 2544x1680 wallpaper_www.wallpaperfo.com_88பிரான்ஸ் நாட்டின் தடையை மீறி முக்காடு அணிந்த பெண்ணுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பொதுமக்கள் முகத்தை மூடியபடி தெருக்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தடையை மீறி பிரான்சில் உள்ள வெர்சைலர்சை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், முகத்தை மூடும் முக்காடு அணிந்து சென்றதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அப்பெண், கிறிஸ்தவராக இருந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மதத்துக்கு மாறியதாகவும், முஸ்லிம் சட்டப்படி முக்காடு அணிந்திருக்கிறேன் இதில் தவறில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

ஆனால் இவரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி 150 யூரோக்கள் அபாரம் செலுத்த வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.


Similar posts

Comments are closed.