ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா

Written by vinni   // January 10, 2014   //

niagara_freeze_002வரலாற்றிலேயே இல்லாத அளவு மிக அதிகளவான குளிரில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவே உலக மக்களின் கண்களில் பெரும் காட்சிப் பொருளாக மாறி மாபெரும் ஐஸ் கட்டி நாடாக மாறிக் கிடக்கிறது.

எங்கு பார்த்தாலும் பனிக் கட்டிகள், ஐஸ் கட்டிகள், கடும் குளிர், பனிக் காற்று.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றை தாங்க முடியாமல் அமெரிக்கா நடுங்கிக் கிடக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது, மேலிருந்து பெரும் சத்தத்துடன் விழும் தண்ணீர் தற்போது ஐஸ் கட்டியாக காட்சி தருகிறது.

கீழே பார்த்தால் ஐஸ் மலைகளாக மாறி நிற்கின்றது தண்ணீர் தடாகம்.

நயாகரா உறைந்து போயிருப்பதைக் காண கடும் குளிரையும், உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

1912ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இப்படி உறைந்துள்ளதாம்.


Similar posts

Comments are closed.