ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்

Written by vinni   // January 10, 2014   //

thuraiyappa_stadium_mahinda_visit_election_0ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜோர்தான், பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார். குறிப்பிட்ட நாடுகளுடனான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்தது.குறித்த நாடுகளுடன் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்திருந்தனர். சற்று நேரத்திற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வந்தடைந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.