மன்னார் மற்றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்யவும்

Written by vinni   // January 10, 2014   //

rayappu-joseph-and-bishop-thomas-savundranayagamதேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற்றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என பொது­ப­ல­ சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ் – சிங்­கள மக்­களின் ஒற்­று­மையை சீர் குலைக்கும் இந்த ஆயர்­களின் சதியை தமிழ் இந்துத் தலை­வர்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மென்றும் தேரர் தெரி­வித்தார்.

இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இரா­ணுவம் மக்கள் மீது இர­சா­யன ஆயுத தாக்­குதல், கொத்து குண்­டு­களை போட்­ட­ன­ரென்றும், எனவே சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென்றும் அமெ­ரிக்க விசேட பிர­தி­நிதி ஸ்டீபன் ராப்­பிடம் மன்னார் ஆயர் இரா­யப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆகியோர் தெரி­வித்­தமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதனைத் தெரி­வித்தார்.

தேரர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்

இலங்­கையில் தமிழ் இந்து சமூ­கத்­தினர் நூற்­றுக்கு 95வீதம் வாழ்­கின்­றனர். அதில் வடித்­தெ­டுத்த சிறு­தொகை தமிழ் மக்கள் தான் கத்­தோ­லிக்­கர்­க­ளா­கவும் கிறிஸ்­த­வர்­க­ளா­கவும் உள்­ளனர்.

அவ்­வா­றா­னதோர் நிலையில் இந்த இரண்டு ஆயர்­களும் மேற்­குல நாடு­களின் நிகழ்ச்சி நிர­லுக்­கேற்ப பிர­பா­கரன் இருந்த காலத்­திலும் இன்றும் தமது நட­வ­டிக்­கை­களை கைவி­டாது முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

எமது இரா­ணு­வத்­தினர் கொடு­மை­யான புலி பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லேயே யுத்­தத்தை முன்­னெ­டுத்து மக்­களை பாது­காத்­தனர். யுத்­தத்தின் போது சில இழப்­பீ­டுகள் ஏற்­ப­டலாம் அது இயற்கை. ஆனால் இந்த ஆயர்­களின் குற்­றச்­சாட்­டுகள் போன்று எமது படை­யினர் நடந்து கொள்­ள­வில்லை.

ஒன்­று­பட்ட இலங்­கையை, மக்­களை மீண்டும் பிள­வு­ப­டுத்த இவர்கள் இரு­வரும் முயற்­சிக்­கின்­றனர். இங்கு பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வதே இவர்­களின் இலக்­காகும். அதனை அடைவதற்காக மேற்­கு­ல­கத்­தி­ன­ருக்கு பொய்­யான தக­வல்­களை வழங்­கு­கின்­றனர். இதனை தமிழ் இந்துத் தலை­வர்கள் புரிந்து கொண்டு தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

அதை­வி­டுத்து பிரி­வி­னை­வாத ஆயர்­களின் பொறியில் சிக்கலாகாது. இலங்கைக்கு எதிராகவும் பிரிவினைவாதத்திற்கும் துணை போகும் மன்னார், யாழ். ஆயர்களை கைது செய்ய வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.