புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார்!– இலங்கை அரசாங்கம்

Written by vinni   // January 10, 2014   //

srilanka flgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வன்னிப் போரின் போது பதினொரு மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்தும் சமிக்ஞை கருவிகள், நோர்வேயின் செய்மதித் தொடர்பாடல் சாதனங்கள் போன்றனவற்றை புலிகள் பயன்படுத்தியுள்ளனர்.

30 ஆண்டுகள் பிரபாகரன் செய்த போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பத் தவறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

விஸ்வநாதன் ருத்ரகுமாரன் மற்றும் அடெல் பாலசிங்கம் ஆகியோருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.