விக்னேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது! திவயின ஊடகம்

Written by vinni   // January 10, 2014   //

cv-vikneswaran-puthinamவட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இலங்கையின் முழு வரலாற்றையும் மாற்றி எழுத வேண்டுமென்று விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அத்துடன், உள்நாட்டு வெளிநாட்டு புத்திஜீவிகளைக் கொண்டு வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எஸ்.ஓ.எஸ் கிராம அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விஜய மன்னரின் வருகை, போர்த்துகேய, ஒல்லாந்த மற்றும் ஆங்கிலேயே ஆட்சிக் கால வரலாற்றை தலைகீழாக மாற்ற விக்னேஸ்வரன் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த முயற்சிக்கு அரசாங்கம் இடமளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.