ரஷியாவில் துப்பாக்கி குண்டு காயத்துடன் 5 பேர் உடல்கள் கண்டெடுப்பு

Written by vinni   // January 10, 2014   //

police-james-morris-sceneரஷியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள சோஷி நகரில் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக்போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்துவதற்கு தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் விளைவாக சில வாரத்துக்கு முன் சோஷி நகருக்கு சற்றுத் தொலைவில் இருக்கும் வோக்கோராட் நகரில் 2 தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடந்து 34 பேர் இறந்தனர்.

இதற்கிடையில் ரஷியாவின் தென்பகுதியில் இருக்கும் ஸ்டாவ்ரோபோல் பிராந்தியத்திலுள்ள 2 இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயத்துடன் 5 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 4 கார்களில் இந்த உடல்கள் இருந்தன. அதோடு ஒரு காரின் அருகில் பயங்கர அதிநவீன வெடிகுண்டுகள் இருந்தன.

இச்சம்பவம் ரஷியாவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஸ்டாவ்ரோபோல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. எனவே கூடுதல் போலீஸ்படை விரைந்தது.


Similar posts

Comments are closed.