ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 402 ரன்கள் குவிப்பு

Written by vinni   // January 9, 2014   //

7327bd2a-d4e0-4274-9c89-5b5567089640_S_secvpfரஞ்சி கிரிக்கெட்டின் கால்இறுதி ஆட்டங்கள் 4 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் மராட்டியத்திற்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணி முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இறுதி கட்டத்தில் இக்பால் அப்துல்லா 49 ரன்களும், கேப்டன் ஜாகீர்கான் 39 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் புகுந்த மராட்டிய அணியில் கேப்டன் ரோகித் மோத்வானி (0), காதிவாலே (4 ரன்), விஜய் ஜோல் (15 ரன்) ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் அந்த அணி திணறிக் கொண்டிருக்கிறது. 2-வது நாள் முடிவில் மராட்டியம் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் மட்டுமே எடுத்து, 183 ரன்கள் பின்தங்கி உள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் ஒரு கால்இறுதியில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 317 ரன்களில் ஆட்டம் இழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வே அணி 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

இதில் அசோக் திண்டா 3 பேரை காலிசெய்தார். இதைத் தொடர்ந்து அரிந்தம் கோசும் (78 ரன், நாட்-அவுட்) விக்கெட் கீப்பர் மகேஷ் ரவுத்தும் (105 ரன், நாட்-அவுட்) ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். 2-வது நாள் முடிவில் ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூரில் நடந்து வரும் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் கர்நாடக அணி 349 ரன்களும், உத்தரபிரதேசம் 9 விக்கெட்டுக்கு 221 ரன்களும் எடுத்துள்ளன.

வதோதராவில் நடக்கும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 277 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் பர்வேஸ் ரசூல் 103 ரன்கள் (137 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். 27 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


Similar posts

Comments are closed.