பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்போட்டி : ஜெயவர்த்தனே அபார சதம்

Written by vinni   // January 9, 2014   //

f8a665e2-5971-4899-8333-fca14529ab6d_S_secvpfபாகிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 165 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று இலங்கை பேட்ஸ்மேன்கள் நிதானம் காட்டினாலும், நாள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர். சங்கக்கரா 26 ரன்னிலும், சன்டிமால் 12 ரன்னிலும், முதலாவது சதத்தை தவற விட்ட கவ்ஷல் சில்வா 95 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மூத்த வீரர் மஹேலா ஜெயவர்த்தனே தனது 32–வது சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவர் ருசித்த முதல் சதம் இதுவாகும்.

ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்துள்ளது. ஜெயவர்த்தனே 106 ரன்களுடனும் (230 பந்து, 12 பவுண்டரி), கேப்டன் மேத்யூஸ் 42 ரன்களுடனும் களத்தில் நிற்கிறார்கள். இலங்கை அணி இதுவரை 153 ரன்கள் முன்னிலை பெற்று வலுவடைந்துள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


Similar posts

Comments are closed.