இலங்கை முஸ்லிம் மக்களின் நட்சத்திரமாக மாறிக்காட்டுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முஜிபூர் ரஹ்மான் சவால்!

Written by vinni   // January 9, 2014   //

downloadபாலஸ்தீனத்தின் நட்சத்திரமாக மாறுவதை விட இலங்கை முஸ்லிம் மக்களின் நட்சத்திரமாக மாறிக்காட்டுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தான் சவால் விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாலஸ்தீனத்தின் நட்சத்திரமாக மாறும் முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்களின் நட்சத்திரமாக மாறிக்காட்ட வேண்டும்.

எனினும் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு அது நிறைவேறாத பகல் கனவு. ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இலங்கை முஸ்லிம்கள் பகலில் நட்சத்திரத்தை காண்கின்றனர். அப்படியான வேலைகளை ராஜபக்ஷ அரசாங்கம் செய்துள்ளது.

பாலஸ்தீனத்தின் நட்சத்திரம் என்ற விருது வழங்கப்பட்டமை தொடர்பில் இலங்கை முஸ்லிம் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ராஜபக்ஷ அரசாங்கம் உலக முஸ்லிம் மக்களிடம் கிடைத்த கௌரவமாக இந்த விருதை காண்பிக்க முயற்சித்து வருகிறது.

அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் அடிப்படைவாத மத செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் முஸ்லிம் மக்கள் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.

முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள் தொடர்ந்தும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதோடு மத உரிமை, வர்த்தகம் செய்யும் உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது இருந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.