சாப்பாடு போட மாட்டோம்! மிஷெல் ஒபாமா அதிரடி

Written by vinni   // January 9, 2014   //

Barack_Obama_family_portrait_2011தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு வருபவர்களுக்கு சாப்பாடு கிடையாது என அறிவித்துள்ளார் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா.

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, வருகிற 17ம் திகதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இருப்பினும் 18ம் திகதி தான் வெள்ளை மாளிகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது என மிஷெல் அறிவித்துள்ளார், மேலும் அனைவரும் வயிறு நிறைய உணவருந்தி விட்டு வாருங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என்பதால், உணவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மிஷெல் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.