500 கிலோ வெள்ளியில் அவதரித்த சோனியா காந்தி

Written by vinni   // January 9, 2014   //

goddess-sonia-240x180_1_635247955274330633ஐதராபாத்தில் தனித் தெலுங்கானா உதயமானதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சங்கர் ராவ் என்பவர் அவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் 500 கிலோ எடை கொண்ட வெள்ளியால் இந்த சிலையினை வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து சங்கர் ராவ் கூறுகையில், தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சோனியா நிறைவேற்றினார். இதனால் இவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயில் அமைக்க முடிவு செய்துள்ளேன்.

இந்த கோயில், பெங்களூரூ- ஐதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள எனது மகளுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும். இதற்கு சோனியா காந்தி சாந்தி வதன் என்று பெயரிடப்படும். தெலுங்கானா மக்கள் இங்கு சென்று நன்றி செலுத்த இந்த கோயில் ஏதுவாக இருக்கும்.

மேலும் இந்த சிலை 500 கிலோ எடை கொண்ட வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் முகஸ்துதிக்காக செய்யப்படவில்லை. நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. , 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளேன் என்றும் குறிப்பாக நேரு குடும்பத்தினருக்கு நான் முழு விசுவாசியாவேன் எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.